/

ரஜினி - ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்துக்கு இசையமைப்பதை உறுதி செய்த அனிருத்!

பேட்டியொன்றில் இந்தியன் 2 மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் படங்களுக்கு தான் இசையமைத்து வருவதாக அவர் கூறியுள்ளார்... 

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 5:45 am

எழில்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு தான் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகப் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் படத்துக்கு இசையமைப்பதை அனிருத் உறுதி செய்துள்ளார். ஆங்கில  நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் இந்தியன் 2 மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் படங்களுக்கு தான் இசையமைத்து வருவதாக அவர் கூறியுள்ளார். 

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.