பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற நடிகை சுஜா வருணியின் திருமணம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் என்கிற சிவகுமாரைக் காதலித்து திருமணம் செய்தார் சுஜா. இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ள சுஜாவுக்குச் சமீபத்தில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் சுஜா பகிர்ந்துள்ளார்.