விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பு: பழனி கோயிலில் ஏ.ஆர். முருகதாஸ் வழிபாடு!
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்...


சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 முதல் மும்பையில் தொடங்கும் என்று அறியப்படுகிறது. 2020 பொங்கல் சமயத்தில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். ரஜினியின் 167-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, இயக்குநர் முருகதாஸ் பழனி கோயிலில் வழிபாடு மேற்கொண்டார் என்கிற தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...