ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மோடிக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது...

News image
Updated On :25 மே 2019, 6:55 am

எழில்

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதற்கு உலகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மோடி மற்றும் பாஜவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வியக்கத்தக்க வகையில் ஒன்றிணைந்த இந்தியா முன்னேற்றமடைவதைக் காண ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார். 

இதற்குப் பதில் அளித்த மோடி, நன்றி ரஹ்மான். வலுவான, வளம் மிகுந்த, முன்னேற்றமான இந்தியாவைக் கட்டமைக்க தீவிர முயற்சி எடுப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.