வருமானப் பகிர்வை முடிவு செய்யும் நடிகர்கள்: திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் புதிய முடிவு!
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், வருமானப் பகிர்வு தொடர்பாக புதிய முடிவு எடுத்துள்ளது.


தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், வருமானப் பகிர்வு தொடர்பாக புதிய முடிவு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பராமரிப்புச் செலவுகள் உயர்வு, சொத்து வரி உயர்வு, வேலையாள்கள் ஊதிய உயர்வு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நடிகர்களுக்கு ஏற்றாற்போல புதிய வருமானப் பகிர்வு நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் ஒரு பிரிவிலும் சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளார்கள். இந்த நடிகர்கள் தவிர இதர நடிகர்கள் ‘மற்ற நடிகர்கள்’ பிரிவில் இடம்பெற்றுள்ளார்கள்.
ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களின் வருமானப் பகிர்வு - நகரங்களில் 60 சதவிகிதமும் இதரப் பகுதிகளில் 65 சதவிகிதமும் என நடிகர்களுக்கு ஏற்றாற்போல அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தப் பிரிவில் உள்ள நடிகர்களின் பட வருமானம் 55% - 60% என்றும் மற்றவை பிரிவில் உள்ள நடிகர்களின் பட வருமானம் 50 - 50% என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...