விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பிரபல இணையத் தொடரில் நடிக்கவுள்ள அமலா பால்

லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற வெப் சீரீஸ் (இணையத் தொடர்) கடந்த வருடம் வெளியாகி மிகுந்த கவனத்தைப் பெற்றது. 

News image
Updated On :9 அக்டோபர் 2019, 5:36 am

எழில்

லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற வெப் சீரீஸ் (இணையத் தொடர்) கடந்த வருடம் வெளியாகி மிகுந்த கவனத்தைப் பெற்றது. 

பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்குக் கதைகளைக் கொண்ட இந்த இணையத் தொடரில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா போன்ற நடிகைகள் நடித்தார்கள். கரன் ஜோஹர், அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பேனர்ஜி ஆகியோர் இயக்கினார்கள். 

இந்தத் தொடர் தற்போது தெலுங்கில் படமாக்கப்படவுள்ளது. ஒரு கதையில் நடிக்க அமலா பால் சம்மதம் தெரிவித்துள்ளார். சமந்தா நடித்த ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி, அமலா பால் இடம்பெறும் கதையை இயக்கவுள்ளார். இதர கதைகளை தருண் பாஸ்கர், சங்கல்ப் ரெட்டி, சந்தீப் வாங்கா ஆகியோர் இயக்கவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.