கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் விடியோ இதுதான்

பிகில் பட டிரெய்லர் வெளியானபோது சில சாதனைகளை அது நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது

News image
Updated On :17 அக்டோபர் 2019, 4:28 am

DIN

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ள பிகில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது.

Story image

நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது. பிகில் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

சமீபத்தில் பிகில் பட டிரெய்லர் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே இந்தியாவில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர்களில் யூடியூபில் அதிக லைக்குகள் வாங்கிய படம் என்கிற பெருமை பிகில் டிரெய்லருக்குக் கிடைத்துள்ளது.

Story image

இதற்கு முன்பு ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் யூடியூபில் 2 மில்லியன் லைக்குகளை வாங்கியது. பிகில் படம் அதைத் தாண்டி அதிக லைக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. வ்யூஸ் எண்ணிக்கையில் ஜீரோ படம் 12 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரம் பெற்றுள்ளது. பிகில் படம் 2 கோடியே 98 லட்சத்து 64 ஆயிரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.