திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மூன்று நாள்களில் ரூ. 294 கோடி வசூலித்துள்ள சாஹோ: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது....

News image
Updated On :3 செப்டம்பர் 2019, 10:36 am IST

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள். 

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான சாஹோ படத்துக்குக் கிடைத்துள்ள விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. பலரும் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களை அளித்துள்ள நிலையில் வசூலில் அசத்தியுள்ளது சாஹோ படம். 

இப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது. இதன்படி சாஹோ படம் கடந்த ஞாயிறு வரை, அதாவது முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 294 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சாஹோ படம் குறைந்தபட்சம் ரூ. 400 கோடி வசூலை உலகளவில் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.