ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

மீண்டும் இசையமைப்பாளர் ஆனார் பவதாரிணி!

மித்ர் மை ஃப்ரண்ட் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான பவதாரிணி கடைசியாக 2012-ல் போரிட பழகு என்கிற படத்துக்கு

Published On :

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி, மீண்டும் இசையமைப்பாளராகியுள்ளார்.

அறிமுக இயக்குநர் அசோக் தியாகராஜனின் மாயநதி என்கிற படத்தில் அபி சரவணன், வெண்பா போன்றோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் பவதாரிணி இசையமைக்க வேண்டும் என ஆர்வமாக இருந்தேன் என்று இயக்குநர் கூறியுள்ளார். கோடைக் காலத்தில் இந்தப் படம் வெளிவரவுள்ளது. 

மித்ர் மை ஃப்ரண்ட் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான பவதாரிணி கடைசியாக 2012-ல் போரிட பழகு என்கிற படத்துக்கு இசையமைத்தார். ஜான் விஜய் நடித்துள்ள கள்வர்கள் என்கிற படத்துக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பவதாரிணி இசையமைத்து நீண்ட நாள் கழித்து ஒரு படம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.