3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

30 களின் பிரபல குழந்தை நட்சத்திரம் ‘பேபி சரோஜா’ மறைவு!

9 வயதில் சரோஜாவின் புகழ் ஜப்பான் வரையிலும் பரவியிருந்தது. அங்கு பேபி சரோஜாவின் முகம் அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் அப்போது பிரபலமாயிருந்தன.

News image

baby saroja

Updated On :15 அக்டோபர் 2019, 11:55 am IST

பேபி சரோஜா, (சரோஜா ராமாமிர்தம்) 30 களில் தமிழ் சினிமாவைக் கலக்கிய குழந்தை நட்சத்திரம். அவர், வயோதிகம் காரணமான உடல்நலக் குறைவால் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 88.

தமிழ் சினிமாவின் பீஷ்ம பிதாமகர்களில் ஒருவரான இயக்குனர் கே சுப்ரமண்யத்தின் சகோதரர் கே விஸ்வநாதனின் மகளான பேபி சரோஜாவை தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர் அவரது பெரியப்பாவே தான். 1931 ஆம் ஆண்டில் பிறந்தவரான பேபி சரோஜாவை அவரது இயற்பெயரிலேயே தனது மூன்று திரைப்படங்களில் நடிக்க வைத்தார் இயக்குனர் கே சுப்ரமண்யம். அவற்றில் முக்கியமானவை பால யோகினி மற்றும் தியாகபூமி.

பாலயோகினியில் பட்டு கவுன் பறக்க அழகான சுருட்டைத் தலைமயிருடன் கண்கள் விரியப் புன்னகைத்தவாறு பேபி சரோஜா பாடிய ‘கண்ணே பாப்பா’ பாடல் அன்றைய தேதியில் அகில உலகப் புகழ் பெற்ற பாடலாக அமைந்திருந்தது. அந்தப் பாடலைத் தொடர்ந்து அந்தக் காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் சரோஜா என்று பெயர் வைக்கத் தலைப்பட்டார்கள் அன்றைய பெற்றோர். அந்த அளவுக்கு பேபி சரோஜாவை வாஞ்சையுடன் தங்கள் வீட்டுக் குழந்தையாகக் கருதி நெக்குருகினார்கள் ரசிகர்கள். பேபி சரோஜாவின் குடும்பத்தில் பலரும் இசை விற்பன்னர்கள். அவரது அம்மாவே மிக அருமையான பாடகி தான். அத்துடன் அவர் அன்று நடித்த கல்கியின் ‘தியாகபூமி’ திரைப்படத்தில் மிகப்பெரும் இசை ஜாம்பவான்களில் ஒருவரான பாபநாசம் சிவனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் கூட அன்று பேபி சரோஜாவுக்கு கிட்டியது.
அதுமட்டுமல்ல, பாபநாசம் சிவன் எழுதிய ‘கிருஷ்ணா நீ பேகனே பரோ’  பாடலுக்கு பேபி சரோஜா ஆட அவரது அம்மா அலமேலு பாடினார்.

தியாகபூமிக்குப் பிறகு காமதேனு எனும் திரைப்படத்தில் பேபி சரோஜா நடித்தார். அத்திரைப்படத்தை இயக்கியவர் அன்று பாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராக இருந்த நந்தலால் ஜஸ்வந்த்லால்.

சினிமா, இசை மட்டுமல்ல இசைக்கருவிகளை இசைக்க கற்றுக் கொள்வதிலும் பேபி சரோஜா மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். காரைக்குடி சாம்பசிவ ஐயரின் சிஷ்யையாக வீணை கற்றுக் கொண்டவர் சரோஜா.

9 வயதில் சரோஜாவின் புகழ் ஜப்பான் வரையிலும் பரவியிருந்தது. அங்கு பேபி சரோஜாவின் முகம் அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் அப்போது பிரபலமாயிருந்தன. அதன் காரணமாகவே செர்லி டெம்பிள் ஆஃப் (புகழ்பெற்ற அமெரிக்க குழந்தை நட்சத்திரம்) தமிழ் சினிமா என்றொரு புகழும் சரோஜாவை வந்தடைந்தது.

திருமணமாகி மும்பைக்கு குடிபெயர்ந்தபின்னர் கூட பேபி சரோஜா சும்மா இருந்ததில்லை. தனது 70 வயதிலும் கூட ஜப்பானிய காகிதக் கலையைக் கற்றுத்தேர்ந்தார். 
 

Related Article

என்னைத் தூக்கி நிறுத்திய உறவுகளே, உங்களால் வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகை

தணிக்கைச் சான்றிதழுடன் தீபாவளிக்கு முதலில் தயாராகிவிட்ட ‘கைதி’!

ரஜினி படத்துக்கு இசையமைக்கும் இமான்: அறிவிப்பு எப்போது வெளிவரும்?

பிகில் எப்படிப்பட்ட படம்! ட்ரெய்லர் விமரிசனம் (விடியோ)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.