/

தர்பாரின் எஃப்.டி.எஃப்.எஸ் காட்சியைப் பார்க்க ஜப்பானிலிருந்து வந்த ரசிகர்!

தர்பார் படத்தின் எஃப்.டி.எஃப்.எஸ் என்கிற முதல் காட்சியைப் பார்க்க ஜப்பானிலிருந்து ரசிகர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளார்.

News image
Updated On :7 ஜனவரி 2020, 10:28 am

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் தர்பார் படத்தின் எஃப்.டி.எஃப்.எஸ் என்கிற முதல் காட்சியைப் பார்க்க ஜப்பானிலிருந்து ரசிகர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளார். யுசுதா ஹிடேதோஷி என்கிற ஜப்பானியர், சென்னை ரோஹிணி திரையரங்கில் காலைக் காட்சியைக் காணவுள்ளார். அவருக்கு டிக்கெட் வழங்கி, இத்தகவலை வெளியிட்டுள்ளார் ரோஹிணி திரையரங்கைச் சேர்ந்த நிகிலேஷ் சூர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.