மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறாரா?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்!

பொன்னியின் செல்வன் படத்தில் யார் பாடல்கள் எழுதுகிறார்கள் என்பதைப் பற்றி...
மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறாரா?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்!
Updated on
1 min read

தமிழகத்தின் பாரம்பரிய இசையை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் த ஃப்யூச்சர்ஸ் (Ta Futures) என்கிற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அவருடைய பிறந்தநாளான நேற்று, இதன் தொடக்க விழா நடைபெற்றது. 

தமிழ்நாட்டு இசைக்கென்று ஒரு ஒலி உள்ளது. கலாசாரம் உள்ளது. இதை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்வது தான் இந்த அமைப்பின் நோக்கம் என்றார் ரஹ்மான். 

மணி ரத்னம் தற்போது இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ரோஜா படத்தில் ஆரம்பித்த மணி ரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி முதல்முறையாகப் பிரிந்துள்ளதாக அறியப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, படத்தைத் தயாரிக்கும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. பாடலாசிரியர் பெயர் இல்லாத படக்குழுப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் த ஃப்யூச்சர்ஸ் தொடக்க விழாவின்போது, தனியார் தொலைக்காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் அளித்த ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் - வைரமுத்து விவகாரம் குறித்துப் பேசியதாவது:

பொன்னியின் செல்வன் படத்தில் யார் பாடல்கள் எழுதுகிறார்கள் என்பதைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்வீர்கள். இப்போது எதுவும் சொல்ல முடியாது. இதுகுறித்து எதுவாக இருந்தாலும் மணி ரத்னம் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com