உள்ளாடை நிறுவனத்தின் பெயர் என படத்தலைப்பை ஏற்க மறுத்தார்கள்: அமிதாப் பச்சன்
டான் என்கிற படத்தின் தலைப்பை இயக்குநர் சந்திரா வெளியிட்டபோது, விநியோகஸ்தர்கள் யாரும் அதனை ஏற்க மறுத்தார்கள்.


1978-ல் அமிதாப் பச்சன், ஜீனத் அம்மன் நடிப்பில் சந்திரா பரோட் இயக்கத்தில் வெளியான படம் - டான். ஆரம்பத்தில் எதிர்மறை விமரிசனங்களால் பாதிக்கப்பட்ட இந்தப் படம், Khaike Paan Banaraswala என்கிற பாடலால் ரசிகர்களின் கவனத்துக்குச் சென்று பிறகு சூப்பர் ஹிட்டானது. இந்த டான் படம்தான் 1980-ல் ரஜினி நடிப்பில் பில்லாவாக வெளியானது.
மே 12 அன்று வெளியான இந்தப் படம் பற்றி அமிதாப் பச்சன், தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியதாவது:
டான் என்கிற படத்தின் தலைப்பை இயக்குநர் சந்திரா வெளியிட்டபோது, விநியோகஸ்தர்கள் யாரும் அதனை ஏற்க மறுத்தார்கள். அப்போது டான் (Dawn) என்கிற உள்ளாடை நிறுவனம் ஒன்று இருந்தது. புகழ்பெற்ற நிறுவனம் என்பதால் மக்கள் அதைத்தான் எண்ணுவார்கள் எனச் சொன்னார்கள். காட்ஃபாதர் படம் பற்றி அப்போதுதான் பேசிக்கொண்டிருந்தார்கள். எனவே திரைத்துறையினருக்கு டான் என்கிற வார்த்தை பற்றி தெரியாமல் இருந்தது.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமாரிடம் சந்திரா படத்தைக் காண்பித்தார். 2-வது பாதி இறுக்கமாக உள்ளதால் ஒரு பாடல் தேவை என்றார். அப்படித்தான் Khaike Paan Banaraswala பாடல் உள்ளே நுழைந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...