திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி: கர்நாடக அரசு புதிய உத்தரவு

கர்நாடகத்தில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.
திரையரங்கில் பார்வையாளர்கள் (கோப்புப் படம்)
திரையரங்கில் பார்வையாளர்கள் (கோப்புப் படம்)

கர்நாடக மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் ஏப்ரல் 20 வரை 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று கிட்டத்தட்ட 5000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெங்களூரில் மட்டும் 3509 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தின் பாசிடிவிடி ரேட் 4.64% ஆக உள்ளது. 

இதையடுத்து கரோனா பரவலைத் தடுப்பதற்காகப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது கர்நாடக அரசு. இந்தியாவில் பிப்ரவரி 1 முதல் 100 சதவீதம் பாா்வையாளா்களுடன் திரையரங்குகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக பெங்களூர் நகரம், மைசூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் ஏப்ரல் 20 வரை 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் இந்த உத்தரவுக்கு கன்னடத் திரையுலகைச் சேர்ந்த பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த உத்தரவால் கன்னடத் திரையுலகம் வருமான இழப்பைச் சந்திக்க நேரிடும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com