கார்த்தி நடித்த சுல்தான்: மே 2-ல் ஓடிடியில் வெளியாகிறது!
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள சுல்தான் படம் ஓடிடியில்...


கார்த்தி நடித்த சுல்தான் படம் மே 2-ல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள சுல்தான் படம் ஓடிடியில் வெளியாகிறது. மே 2-ல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் சுல்தான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது: இப்படம் பார்க்க திரையரங்குக்குக் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்புக் கொண்டு கூறும்போது மழ்ச்சியாக இருக்கிறது. மேலும், இப்படம் திரையரங்கிற்கான படம். அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிற்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவுக்குப் பாராட்டுக்கள் வந்திருக்காது. அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...