விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்?
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
இதையும் படிக்க | 'பீஸ்ட்' படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைகிறாரா தனுஷ் ?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் - அனிருத் இணைவதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார்.
இதையும் படிக்க | தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதி புகைப்படங்கள்
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சனின் ஆரம்பகால நண்பரான சிவகார்த்திகேயன் பீஸ்ட் திரைப்படத்தில் பாடல் எழுத ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
எனினும் இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...