தனது புதிய படத்தின் அப்டேட்டை புகைப்படத்துடன் பகிர்ந்துகொண்ட சிம்பு
கௌதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதா நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.


கௌதம் மேனன் இயக்கி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதா நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
ஜெயமோகன் இந்தப் படத்துக்கு கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கௌதம் மேனன் சகோதரி உத்தாரா மேனன் இந்தப் படத்தில் உடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். கவிஞர் தாமரை இந்தப் படத்தின் பாடல்களை எழுதுகிறார்.
இந்தப் படத்தில் நடிகை ராதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் இடையேயான பிரச்னையில் தயாரிப்பு தரப்பு படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.
இதையும் படிக்க | நடிகர் சூர்யா நிறுவனத்தின் பேரில் மோசடி: எச்சரிக்கைப் பதிவு
இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ''கடும் இருட்டான இரவுக்குப் பின் ஒரு ஒளி பிறக்கும் என எப்பொழுதும் நம்புகிறேன். நன்றி இறைவா'' என்று குறிப்பிட்டு 'வெந்து தணிந்தது காடு' இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...