/

மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறப்பு விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்

பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு விசா வழங்கப்பட்டுள்ளது.

News image
மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறப்பு விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
Updated On :31 ஆகஸ்ட் 2021, 3:40 pm

DIN

பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு விசா வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு கோல்டன் விசா என அழைக்கப்படும் சிறப்பு பாஸ்போர்ட்டை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது. 

இந்த  விசாவின் மூலம் எத்தகைய முன்நிபந்தனையுமின்றி 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கவும், தங்களது தொழிலை மேற்கொள்ளவும் முடியும். 

இந்நிலையில் பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸுக்கு சிறப்பு விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பு செய்துள்ளது. 

இதற்கு முன்னதாக நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இந்த சிறப்பு விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.