ட்விட்டர், இன்ஸ்டகிராம் பதிவுகளை நீக்கினார் நடிகை தீபிகா படுகோன்

தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறிய தீபிகா படுகோன்...
ட்விட்டர், இன்ஸ்டகிராம் பதிவுகளை நீக்கினார் நடிகை தீபிகா படுகோன்
Updated on
1 min read

தனது ட்விட்டர், இன்ஸ்டகிராம் பதிவுகளைப் பிரபல நடிகை தீபிகா படுகோன் நீக்கியுள்ளார்.

ட்விட்டரில் 27.7 மில்லியன் பேரும் இன்ஸ்டகிராமில் 52.5 மில்லியன் பேரும் தீபிகா படுகோனைப் பின்பற்றுகிறார்கள்.

இந்நிலையில் தனது ட்விட்டர், இன்ஸ்டகிராமில் உள்ள பதிவுகளை தீபிகா படுகோன் திடீர் என நீக்கியுள்ளார். அவருடைய கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதா என ரசிகர்கள் சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவற்றை தீபிகா படுகோன் தான் நீக்கியுள்ளார் என்பது பிறகு உறுதியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை அவர் எடுத்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

தற்போது ராஜஸ்தானில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் விடுமுறைக் கழித்து வருகிறார்.

இன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறிய தீபிகா படுகோன் அது தொடர்பான ஆடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com