கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கொங்கு நாடா, தலை சுற்றுகிறது: நடிகர் வடிவேலு

தமிழ்நாடு நன்றாக உள்ளது. அதை ஏன் பிரிக்கவேண்டும்? நான் அரசியல் பேசவில்லை...

News image
Updated On :14 ஜூலை 2021, 5:31 am

DIN

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவும் வகையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்தை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் வடிவேலு வழங்கினார். முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

செய்தியாளர்களிடம் வடிவேலு பேசியதாவது:

முதல்வரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். மிகவும் எளிமையாக, குடும்பத்தில் ஒருவரைப் போல என்னிடம் பேசினார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளேன். 

அதிகமான படங்களில் இனி என்னைப் பார்க்கலாமா எனக் கேட்கிறீர்கள். திரைப்படங்களிலும் ஓடிடியிலும் நான் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக. நல்லதே நடக்கும்.

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் விதத்தில் கரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். மக்களுக்கு மெய்சிலிர்க்கிறது. அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் எனக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து அவர்களைத் தன்வசப்படுத்தினார். மக்களே ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அளவுக்கு முதல்வர் பேசியது எங்களுக்கு எல்லாம் நெகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு திட்டங்களையும் அழகாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது மக்களுக்கு இது பொற்கால ஆட்சியாக இருக்கும். நான் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டேன். இன்னும் 40 தடுப்பூசிகள் போடச் சொன்னாலும் போட்டுக்கொள்வேன். அந்தளவுக்குப் பீதியாக உள்ளது. அனைவரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

கொங்கு நாடு சர்ச்சை பற்றி கேட்கிறீர்கள். ராம் நாடு, ஒரத்தநாடு எல்லாம் ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது. அதை ஏன் பிரிக்கவேண்டும்? நான் அரசியல் பேசவில்லை. அது வேண்டாம். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.