டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 119 போ் பங்கேற்கிறார்கள். இவர்களில் 67 வீரர்களும் 52 வீராங்கனைகளும் உள்ளார்கள். 18 விளையாட்டுகளில் 85 பதக்கங்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. ஜூலை 17 அன்று இந்தியக் குழுவினரின் முதல் அணி டோக்கியோவுக்குப் புறப்படுகிறது. அதில் 90 பேர் அடங்கிய வீரர்களும் அதிகாரிகளும் செல்வார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நேத்ரா குமணன், வருண் ஏ. தக்கார், கே.சி. கணபதி, ஜி. சத்யன், ஷரத் கமல், சி.ஏ. பவானி தேவி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், எஸ். தனலட்சுமி, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி என 11 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களிடம் இணையம் வழியாக நடிகர் கமல் ஹாசன் உரையாடினார். இதுபற்றி ட்விட்டரில் கமல் கூறியதாவது:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும் என்று கூறியுள்ளார்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் நடிகர் கமல் ஹாசன் இணையம் வழியாக உரையாடியதன் 7 நிமிட விடியோ, மக்கள் நீதி மய்யம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை: அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியீடு!

திமுகவில் ஊழலுக்காக பதவி ராஜிநாமா! மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்!

ராத்து ராசன் பாடல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


