மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓடிடியால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்: நடிகை அமலா பால்

ஓடிடி வரவால் புதிய கதைகளைப் படமாக்குவதில் இயக்குநர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகப் பிரபல நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

News image
Updated On :16 ஜூலை 2021, 9:22 am

DIN

ஓடிடி வரவால் புதிய கதைகளைப் படமாக்குவதில் இயக்குநர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகப் பிரபல நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

ஓடிடியில் வெளியாகியுள்ள தெலுங்கு இணையத் தொடர் ஒன்றில் காவலராக நடித்துள்ளார் நடிகை அமலா பால். இதையடுத்து ஓடிடியின் வரவால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பற்றி அவர் கூறியதாவது:

ஓடிடியின் சிறப்பம்சம், வித்தியாசமான கதைகளை நமக்குத் தருகிறது. 2020 முதல் நான் பார்க்கும் கதைகள் வேறுவிதமாக உள்ளன. எல்லோருக்கும் புதிய முயற்சியை செய்து பார்ப்பதில் ஆர்வம் வந்துள்ளது. ஓடிடி, எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை அளிக்கிறது. திரையரங்குகளில் பாப்கார்னைச் சாப்பிட்டுக்கொண்டே படம்  பார்க்கும் அனுபவத்தை இழந்தாலும் தற்போதைய நிலையில் ஓடிடி சிறந்த மாற்றாக உள்ளது. விசிஆர், சிடி, டிவிடி, ஹோம் தியேட்டர், திரையரங்குகள், ஓடிடி என அனைத்தையும் பார்த்த தலைமுறையில் நானும் ஒருவராக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.