சார்பட்டா பரம்பரை படத்துக்கு அடுத்ததாக காதல் கதையை இயக்கவுள்ளார் பா. இரஞ்சித்.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி. சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது. ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகிறது.
இந்நிலையில் சார்பட்டா பரம்பரைக்கு அடுத்ததாக காதல் படமொன்றை இயக்கவுள்ளார் பா. இரஞ்சித். காலாவுக்கு அடுத்ததாக பிர்சா முண்டா என்கிற படத்தை இயக்க இருந்தார். ஆனால் ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய பா. இரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது என்கிற காதல் கதையைக் கொண்ட ஒரு படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


