அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விஜய் பாணியில் ஸ்டைலாக வாழ்த்து: விடியோ வெளியிட்ட மாளவிகா

நடிகை மாளவிகா மோகனன், விஜய் பிறந்தநாளுக்கு அவரது பாணியிலேயே ஸ்டைலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2021, 1:53 pm

DIN


நடிகை மாளவிகா மோகனன், விஜய் பிறந்தநாளுக்கு அவரது பாணியிலேயே ஸ்டைலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடுகிறார். அவரது 65-வது படமான பீஸ்ட் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இரண்டாவது பார்வை போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

இதையடுத்து, விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் தீயாய் கொண்டாடத் தொடங்கினர். தமிழ் நட்சத்திரங்கள், மலையாள நட்சத்திரங்கள் என விஜய்-க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த வரிசையில் நடிகை மாளவிகா மோகனனும் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தின் ஜேடி கதாபாத்திர பாணியில் அவரைப் போலவே ஸ்டைலாக மாறி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் விடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.