பிறந்த நாள் ஸ்பெஷல்: விஜய் பாடலுக்கு நடனமாடி வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ் (விடியோ)
விஜய் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி...


விஜய் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி அதன் விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இன்று தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் விஜய். பிரபலங்களும் ரசிகர்களும் விஜய்க்குச் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
பைரவா, சர்கார் என விஜய்யுடன் இணைந்து இரு படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த வருடம் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலின் ஒரு நிமிடப் பகுதியை வயலினில் வாசித்து அதன் விடியோவை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ்.
இந்த வருடம், விஜய் நடித்த யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி தன் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...