அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பீஸ்ட் படத்துக்கான நடனப் பயிற்சியைத் தொடங்கிய பூஜா ஹெக்டே

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள பீஸ்ட் படத்துக்கான நடனப் பயிற்சியை பூஜா ஹெக்டே தொடங்கியுள்ளார்.

News image
Updated On :26 ஜூன் 2021, 9:26 am

DIN

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள பீஸ்ட் படத்துக்கான நடனப் பயிற்சியை பூஜா ஹெக்டே தொடங்கியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.  கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாகப் படப்பிடிப்பு நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் திரைப்படப் படப்பிடிப்புக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மீண்டும் தொடரவுள்ளது. ஜூலை 1 முதல் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பீஸ்ட் படத்துக்கான நடனப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.