தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஓடிடியில் களமிறங்கியுள்ள ஏ.வி.எம். நிறுவனம்

ஏ.வி.எம். தயாரிப்பில் உருவாகவுள்ள தமிழ் ஸ்டாக்கர்ஸ் (Tamil Stalkers) என்கிற இணையத் தொடரை அறிவழகன் இயக்கவுள்ளார்.

News image
Updated On :24 மார்ச் 2021, 10:55 am

DIN

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம்., இணையத் தொடரைத் தயாரிக்கவுள்ளது.

2014-ல் இதுவும் கடந்து போகும் என்கிற படத்தைக் கடைசியாகத் தயாரித்தது ஏ.வி.எம். நிறுவனம். இந்நிலையில் சோனி லைவ் (SonyLIV) ஓடிடியுடன் இணைந்து இணையத் தொடரைத் தயாரிக்க முன்வந்துள்ளது. 

ஏ.வி.எம். தயாரிப்பில் உருவாகவுள்ள தமிழ் ஸ்டாக்கர்ஸ் (Tamil Stalkers) என்கிற இணையத் தொடரை அறிவழகன் இயக்கவுள்ளார். ஈரம், குற்றம் 23 போன்ற படங்களை அவர் இயக்கியுள்ளார்.

ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸைச் சேர்ந்த அருணா குகன், அபர்ணா குகன் இதுபற்றி கூறியதாவது: சோனி லைவ் உடன் இணைந்து தொடரைத் தயாரிப்பதில் ஆர்வமாக உள்ளோம் என்றார்கள். இந்த வருட இறுதியில் இணையத் தொடர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சோனி லைவ் ஓடிடியில் தமிழ் ஸ்டார்க்கர்ஸ் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.