அண்ணாத்த படப்பிடிப்பு: சென்னை திரும்பும் ரஜினி
கடந்த ஒரு மாதமாக அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு வரும் ரஜினி, தன்னுடைய காட்சிகளை...


ஹைதராபாத்தில் கடந்த ஒரு மாதமாக அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு வரும் ரஜினி, தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்டதால் விரைவில் சென்னை திரும்பவுள்ளார்.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.
கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். தற்போது, அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த மாதம், தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றார் ரஜினி.
இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினி. இதனால் வெகுவிரைவில் சென்னைக்குத் திரும்பவுள்ளார். இதன்பிறகு சென்னையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு, உடல் பரிசோதனைக்காக ஜூன் மாதம் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். ரஜினி சென்னைக்குத் திரும்பினாலும் இன்னும் சில நாள்கள் ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...