மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'தேசிய விருதில் 4 பேருக்குதான் போட்டி' - 'ஜெய் பீம்' குறித்து பிரபல இயக்குநர் புகழாரம்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் படம் குறித்து இயக்குநர் சேரன் புகழாராம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 நவம்பர் 2021, 10:04 am

DIN

சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் நேற்று (நவம்பர் 2) அமேசான் பிரைமில் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக குருமூர்த்தியாக இயக்குநர் தமிழ் நடித்திருந்தார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் என்ற படத்தையும் தமிழ் இயக்கியுள்ளார். டாணாக்காரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

Story image

இந்த நிலையில் ஜெய் பீம் படப்பிடிப்பின் போது, நடிகர் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் மொசக்குட்டியாக நடித்தவருடன் இருக்கும் புகைப்படத்தை தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

இந்த நிலையில் அந்தப் பதிவிற்கு இயக்குநரும் நடிகருமான சேரன், ''வாழ்த்துகள் சகோதரர். இயக்குநர் என்று தெரிந்தவுடன் இன்னும் பெருமை கொண்டேன். நீங்கள் நான்கு பேருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். இந்த வருடம் தேசிய விருதில் உங்க நான்கு பேருக்குதான் போட்டி'' என்று தெரிவித்துள்ளார். 

அதற்கு பதிலளித்துள்ள தமிழ், அண்ணா நன்றி. நீங்கள் வாழ்த்தியதே விருதுக்கு சமம். நன்றி என்று தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.