தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

புல்லரிக்க வைக்கும் காட்சிகள்: 83 படத்தின் டிரெய்லர் வெளியானது

1983 உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2021, 5:39 am

DIN

ரன்வீர் சிங் நடித்த 83 படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. கபீா்கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். 83-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த வருடம் வெளியாவதாக இருந்த இப்படம் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 24 அன்று 83 படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் பலரும் புல்லரிக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.