தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முத்தமிட்டுக்கொள்ளும் போட்டியாளர்கள்: வைரலாகும் சர்ச்சை விடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் முத்தமிட்டுக்கொள்ளும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :13 அக்டோபர் 2021, 11:40 am

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் முத்தமிட்டுக்கொள்ளும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல் இந்த சீசனை பார்க்க மக்களிடையே ஆர்வம் குறைவாக காணப்படுகிறது. பெரும்பாலான போட்டியாளர்கள் மக்களுக்கு அதிகம் பரீட்சையம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 

பொதுவாக பிக்பாஸ் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பும் உருவாகி வருகிறது. பொதுவாக ஆணும், பெண்ணும் சகஜமாக பலகி வருவது, காதல் செய்வது கலாச்சார சீர்கேடு என ஒரு சிலர் பிற்போக்குத்தனமாக விமரிசித்து வருகின்றனர்.

தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிலையில் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் மீஷா ஐயர் மற்றும் இஷான் கேசல் ஆகிய போட்டியாளர்கள் மிக நெருக்கமாக பழகி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான ப்ரமோவில் இருவரும் கேமராக்கள் இருப்பதைக் கூட மறந்து ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொள்கின்றனர். இந்த ப்ரமோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.