தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அட்லி - ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா ?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.  

News image
Updated On :26 அக்டோபர் 2021, 10:08 am

DIN

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.  

பிகில் படத்துக்குப் பிறகு இயக்குநர் அட்லி, ஷாருக்கான் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறையில் இருக்கிறார். இதன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மெர்சல், பிகில் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தாமதாமாகியுள்ளதால் இந்தப் படத்தில் இருந்து நயன்தாரா விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தென்னிந்திய நடிகையை பயன்படுத்துவது என இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் ஆகியோர் முடிவெடுத்திருக்கிறார்கள். ஏனெனில் தென்னிந்திய நடிகை நடித்தால் அந்தப் படத்தை தென்னிந்தியாவில் விளம்பரப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பது அவர்களின் எண்ணம். 

தற்போது நயன்தாரா வெளியேறியுள்ளதால் அவருக்குப் பதிலாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தப் படத்தில் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகை பிரியாமணி, ஃபேமிலி மேன் தொடர் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு பரீட்சையமாகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.