புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

‘ரொம்ப அட்டூழியம் பண்ணாத’: தாமரையை எச்சரிக்கும் ராஜூ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில் தாமரையை ராஜூ எச்சரிப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.

News image
தாமரையை எச்சரிக்கும் ராஜூ
Updated On :29 அக்டோபர் 2021, 7:22 am

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில் தாமரையை ராஜூ எச்சரிப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.

இந்த சீசனில் கடந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்ட பிறகு சுவாரஸ்யம் குறைந்துவிடும் என பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அனைத்து ப்ரமோவிலும் தாமரை இடம்பெற்று வருகிறார்.

கடந்த புதன்கிழமை தாமரையின் காயினை ஸ்ருதி - பாவினி இருவரும் சேர்ந்து எடுத்ததிலிருந்து தாமரை கொந்தளிப்புடன் காணப்படுகிறார். மேலும், வீட்டில் தனது இருப்பை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கில் கடந்த இரண்டு நாள்களாக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு வருகிறார்.

உதாரணமாக நேற்றைய நிகழ்வில், இசைவாணியிடம் இமான் அண்ணாச்சி பேசிக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து தாமரை இடையூறு அளித்து அண்ணாச்சியை கோபப்படுத்தினார். தொடர்ந்து சிபியுடனும் சண்டை போட்டார்.

இந்நிலையில், வெளியாகியுள்ள ப்ரமோவில் நகர அணி - கிராம அணி போட்டியில் பிரியங்கா நகர அணிக்கு சாதகமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட தாமரை கோபமாகவும் சத்தமாகவும் பேசினார்.

இதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரமோவில் தாமரைக்கு அறிவுரை வழங்கும் ராஜூ, “ நீ பேசுறத ஓரளவுக்குதான் சகித்தி கொள்ள முடியும், ரொம்ப எதார்தமா இருக்கோம்னு ரொம்ப அட்டூழியம் பண்ணாத.. நீ நியாமா நடந்து இருந்தாலும், நீ கத்தி பேசுவதால் வெளியே இருப்பவர்களுக்கு இது நியாமா தெரியாது” என அறிவுரை வழங்குகிறார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.