அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

’மகான்’ - துருவ் தோற்றப் போஸ்டர் வெளியீடு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் ’மகான்’ படத்தில் துருவ் தோற்றத்தின் போஸ்டர் இன்று( செப்-10) வெளியாகியுள்ளது.  

News image
’மகான்’ - துருவ் தோற்றப் போஸ்டர் வெளியீடு
Updated On :10 செப்டம்பர் 2021, 7:23 am

DIN

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் ’மகான்’ படத்தில் துருவ் தோற்றத்தின் போஸ்டர் இன்று( செப்-10) வெளியாகியுள்ளது. 

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து மகான் படத்தில் நடித்து வருகின்றனர்.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்து வருகிறார்.

Story image

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. நடிகை வாணி போஜன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து நடிகர் விக்ரமின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் இன்று (செப்- 10) காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துருவ் வேடத்தின் முதல் தோற்றம் வெளியாகியிருக்கிறது. இதில் மகானா நடிக்கும் விக்ரமின் மகனாக தாதா என்கிற பெயரில் துருவ் நடிக்க இருக்கிறார் என்பதையும் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.