பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்த பிரபல நடிகை : வெளியான புகைப்படம்
பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் நடிப்பதாக நடிகை சாய் காயத்ரி அறிவித்துள்ளார்.


பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் நடிப்பதாக நடிகை சாய் காயத்ரி அறிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் நடித்து வந்த தீபிகா தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

நடிகை சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வணக்கம் மக்களே, இன்றிலிருந்து நீங்கள் எணன்னை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக காணலாம். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு தேவை.
நான் இந்த வேடத்தை முடிந்தவரை சிறப்பாக கையாண்டு உங்களை மகிழ்விப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார். சாய் காயத்ரி ஏற்கனவே ஈரமான ரோஜாவே தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...