அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் 'மகான்' படத்திலிருந்து வெளியான சூறையாட்டம் பாடல் இதோ

விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் மகான் படத்திலிருந்து வெளியான சூறையாட்டம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

News image
Updated On :22 செப்டம்பர் 2021, 12:40 pm

DIN

விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் மகான் படத்திலிருந்து வெளியான சூறையாட்டம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடித்து வரும் படம் மகான். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்து வருகிறார். 

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயாணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இருந்து விக்ரம் மற்றும் துருவ் போஸ்டர் ரீல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. 

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சூறையாட்டம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை முத்தமிழ் எழுத, ஒய்.எம்.மஹாலிங்கம் பாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.