நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

புதிய படத்தில் சன்னி லியோனுடன் இணையும் குக் வித் கோமாளி பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை தர்ஷா குப்தா நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 3:21 pm IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை தர்ஷா குப்தா நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட புகழும்  இந்த படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக அனைவரையும் கவர்ந்த சிவாங்கி, 'டான்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக ரசிகர்களின் மனதில் பதிந்த ஐஸ்வர்யா லக்ஷ்மி, நடிகர் சதீஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் மற்றொரு போட்டியாளரான தர்ஷா குப்தா 'ருத்ர தாண்டவம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

Story image

இதனையடுத்து தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். திகில் கலந்த காமெடி படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை யுவன் என்பவர் இந்தப் படத்தை இயக்க, ஜாவிட் இசையமைக்கிறார். இந்தத் தகவலை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.