கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

''என்னோட பொண்டாட்டி...'' - ஜோதிகாவை வரவேற்ற சூர்யா: ரசிகர்கள் மகிழ்ச்சி

தனது மனைவி ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக கணக்குத் துவங்கியதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 6:58 am

DIN

தனது மனைவி ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக கணக்குத் துவங்கியதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார். 

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து, சசிக்குமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த ,உடன் பிறப்பே, திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகிறது.

Story image

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வேல்ராஜ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைகத்துள்ளார். இரா.சரவணன் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

Story image

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிதாக கணக்கு துவங்கியுள்ளார்.

Story image

காஷ்மீரில் இந்திய தேசியக் கொடியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நடிகர் சூர்யா, ''என்னுடைய பொண்டாட்டி, உன்னை இன்ஸ்டாகிராமில் காண்பது மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.