
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்திருக்கும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் நயன்தாரா கண்மணி என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து அவரது வேடத்துக்கு அவரே டப்பிங் செய்துள்ளார். இந்தப் படத்தில் ராம்போவாக விஜய் சேதுபதியும், கடிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | தமிழின் முக்கிய நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நாயகனாகும் ஜி.வி.பிரகாஷ்
இந்த நிலையில் பட டப்பிங்கின் போது நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய வசனங்களை நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம் என்று குறிப்பிட்டுள்ளார்.
#Kanmani anbodu Kaadhalan Naan ezhudhiya dialogues neeyae dub panradhu migundha sandhosham #KaathuVaakula started dubbing for #KaathuVaakulaRenduKaadhal @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @anirudhofficial @Rowdy_Pictures @7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/DUmsYFDpQe
— Vignesh Shivan (@VigneshShivN) December 2, 2021