எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

'அயலான்'? 'வெந்து தணிந்தது காடு'? : ரஹ்மானின் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்

தனது அடுத்தப் பட பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக தகவல் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:54 am

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விக்ரமின் 'கோப்ரா', சிவகார்த்திகேயனின் 'அயலான்', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', பார்த்திபனின் 'இரவின் நிழல்', சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''வருகிற டிசம்பர் மாதம் தமிழ் படத்தின் இசை வெளியாகவிருக்கிறது. யூகியுங்கள்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' என தங்களது யூகங்களை தெரிவித்து வருகின்றனர். 

சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்திலும், விக்ரமின் 'கோப்ரா' படத்திலும் தலா ஒரு பாடல் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களின் மற்ற பாடல்கள் குறித்த அறிவிப்பாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.