
இயக்குநராகவும் நடன இயக்குநராகவும் அறியப்படும் பாலிவுட் நட்சத்திரம் ஃபரா கான், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நடன இயக்குநரான ஃபரா கான் - மைன் ஹூன் நா, ஓம் சாந்தி ஓம், ஹாப்பி நியூ இயர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்துள்ளார்.
இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ஃபரா கான். இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:
இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளேன். அதேபோல இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் தான் பணிபுரிந்தேன். இருந்தும் எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.