இப்படியா பண்ணுவிங்க? நாக சைதன்யாவுக்கு போலீஸ் அபராதம்
விதிமுறைகளை மீறியதாக நடிகர் நாக சைதன்யாவுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.


நடிகர் நாக சைதன்யா அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். மாநாடு, மன்மத லீலை படங்களுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாக சைதன்யா ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் தனது காரில் வந்துகொண்டிருந்தபோது அவரது காரை காவல்துறையினர் இடைமறித்துள்ளனர். அவரது காரின் கருப்பு நிற கண்ணாடி இருந்ததால் அவருக்கு ரூ.700 அபராதம் விதித்துள்ளனர். மேலும் உடனடியாக காரின் கருப்பு நிற கண்ணாடியை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அபராதத்தை உடனடியாக நாக சைதன்யா செலுத்தியுள்ளார். ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்களே இப்படி செய்யலாமா என காவல்துறையினர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...