கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் களமிறங்கும் நடிகை

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல நடிகை களமிறங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:25 am

DIN

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல நடிகை களமிறங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். மடோன் அஸ்வின் சமீபத்தில் மண்டேலா படத்துக்காக தேசிய விருது பெற்றிருப்பதால் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி நடிக்கவிருப்பது பலரையும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Story image

இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் இயக்குநர் மிஷ்கின் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சரிதா நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தப் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடைசியாக நடிகை சரிதா கடைசியாக தமிழில் ஜூன் ஆர் படத்தில் நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.