மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'ஜீவி 2'

ஜீவி 2 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 10:07 am

DIN

ஜீவி 2 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெற்றி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஜீவி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜே கோபிநாத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் விஜே கோபிநாத் இயக்கியுள்ளார். 

Story image

முதல் பாகத்துக்கு பாபு தமிழ் கதை, வசனம் எழுதியிருந்தார். தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்துக்கு இயக்குநர் விஜே கோபிநாத் கதை வசனம் எழுதியுள்ளார். 

இந்தப் படத்தில் வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரோகினி, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.