பிரபல இசையமைப்பாளரை கணவர் என நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா அறிவித்துள்ளார்.
இயக்குநரின் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா சுரேஷ். பாடகியான அம்ரிதா மலையாளத்தில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்த நடிகர் பாலாவும், அம்ரிதாவும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் கோபி சுந்தரை அம்ரிதா சுரேஷ் காதலித்துவருவதாக கிசு கிசுக்கப்பட்டது. அதற்கேற்ப இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தனர்.
இதையும் படிக்க | 'தி கிரே மேன் 2' - தனுஷ் வெளியிட்ட ஆடியோ - நீங்க தயாரா ?

மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் அம்ரிதா சுரேஷ் தனது பிறந்த நாள் கொண்டாட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இசையமைப்பாளர் கோபி சுந்தர், அம்ரிதா சுரேஷின் சகோதரி அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
அம்ரிதா தனது பதிவில், கோபி சுந்தர், ''உனக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளில்லை. எனக்கு இது மிகவும் சிறப்பான பிறந்த நாள். என் கணவரே, நீ சிறப்பானவர் . நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். கோபி சுந்தரை அம்ரிதா கணவர் என குறிப்பிட்டுள்ளதால் இருவருக்கும் திருமணம் முடிநத்ததா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்

1 தபால் வாக்கை சேகரிக்க மலைப்பாதையில் முக்கால் கி.மீ. நடந்துசென்ற தோ்தல் அலுவலா்கள்

பண மோசடி: போலீஸாா் விசாரணை

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


