/

இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மாவான நமீதா - பிரபலங்கள் வாழ்த்து

நடிகை நமீதா தனக்கு இரட்டைக் குழந்தைகள்பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:07 am

DIN

நடிகை நமீதா தனக்கு இரட்டைக் குழந்தைகள்பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார். 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சிகரமான வேடங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நமீதா. இவருக்கும் மல்லி ரெட்டி வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

சமீபத்தில் நமீதா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார் நமீதா. மேலும் கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். 

 இந்த நிலையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் விடியோ பகிரந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.