‘முப்பது வருட முயற்சி, வியர்வை...’: வைரலாகும் பாடலாசிரியர் ட்வீட்! 

திரைப்பட பாடலாசிரியர் விவேக் அவர்களின் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
‘முப்பது வருட முயற்சி, வியர்வை...’: வைரலாகும் பாடலாசிரியர் ட்வீட்! 
Published on
Updated on
1 min read

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

தற்பொது நடிகர் விஜய் சினிமாவில் நடித்து 30 வருடங்கள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் வாரிசு படத்தில் இரண்டாவது பாடல்  டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. 

“முப்பது வருட முயற்சி, வியர்வை, நெஞ்சின் உள் அறைகளில் உரம் போட்டு வளர்த்த ‘தீ’. Its time ___” என பாடலாசிரியர் விவேக் ட்வீட் செய்துள்ளார். ரசிகர்கள் இதற்கான பதிலை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். தலைவா படத்தில் இட்ஸ் டைம் டூ லீட் (its time to lead) என வாசகம் இருந்தது. பின்னர் சர்ச்சைக்குள்ளாகவே அந்த வார்த்தையின்றி படம் ரிலீஸ் ஆனது. விவேக் அவர்களின் இந்த ட்வீட் 20 ஆயிரத்துக்கும் மேல் லைக்குகள் வாங்கியுள்ளது. 5,692 ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.