பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு தேதியை படக்குழுவினர் அறிவித்தனர்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்பொது தீ தளபதி பாடலுக்கு புதிய அனல் பறக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கெனவே முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் வெளியாகி 78 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
விரைவில் தயாரிப்பாளராகும் கீர்த்தி சுரேஷ்!
நாளை வெளியாகிறது பகாசூரன் டிரைலர்
காதலனுடன் புது வீட்டுக்கு குடியேறவிருக்கும் பிரியா பவானி சங்கர்!
ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? ரசிகர்கள் கிண்டல்!
என் திமிரான தமிழச்சி: காதலியை அறிமுகப்படுத்தினார் பாடகர் அறிவு!
‘முப்பது வருட முயற்சி, வியர்வை...’: வைரலாகும் பாடலாசிரியர் ட்வீட்!