/

‘கட்டா குஸ்தி’ படத்திற்காக தீயாக பயிற்சி எடுத்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் விடியோ!

கட்டா குஸ்தி திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சண்டைப் பயிற்சி செய்யும் விடியோ வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2022, 1:13 pm IST

கட்டா குஸ்தி திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சண்டைப் பயிற்சி செய்யும் விடியோ வெளியாகியுள்ளது.

ராட்சசன், எஃப்ஐஆர் திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை ரவி தேஜா, விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதிலும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில், கட்டா குஸ்தி படத்தின் பயிற்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பயிற்சி எடுக்கும் விடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த விடியோவிற்கு பலரும் தீயாக இருக்கிறதென கமெண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.