ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

’மாநகரம்' பட நாயகனை காதலிக்கும் ரெஜினா?

நடிகை ரெஜினா மாநகரம் படத்தின் நாயகனை காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

News image
Updated On :15 டிசம்பர் 2022, 12:11 pm IST

நடிகை ரெஜினா மாநகரம் படத்தின் நாயகனை காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துவருபவர் நடிகை ரெஜினா. ’கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

இந்நிலையில், அவர் தன் 32-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். ரெஜினாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக நடிகர் சந்தீப் கிஷன் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா. லவ் யூ. சந்தோசமாக இரு. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதனால், இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

‘மாநகரம்’ படத்தில் ரெஜினாவும் சந்தீப் கிஷனும் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதே, இவர்கள் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை இதுகுறித்து இருவரும் மனம் திறக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.